

|
|
காடு செழித்தால் வீடு செழிக்கும்! வீடு செழித்தால் நாடு செழிக்கும்!
இயற்கை சூட்சுமம்
தாவரங்கள் உணவு உற்பத்தி (ஒளிச்சேர்க்கை) செய்ய 98.5% மூலப்பொருளாக இருப்பது சூரிய ஒளியே.
காற்றுமண்டலம் ஒரு நைட்ரஜன் கடல் (78.6%). இதை இரட்டை இலை தாவரங்கள் காற்றிலிருந்து எடுத்து மற்ற தாவரங்களுக்கு கொடுக்கிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ் தேவைக்கு அதிகளவு பூமியில் இயற்கையாகவே படிம வடிவில் இருக்கிறது. இதை நுண்ணுயிரிகள் சிதைத்து பயிர்களுக்கு கொடுக்கிறது. இந்த இயற்கை நுண்ணுயிரிகளை இராசயன உரமும், பூச்சிகொல்லி மருந்துகளும் அழித்து விடுகின்றன. மீண்டும் இதை உருவாக்க நாட்டு பசுமாட்டின் சாணம் மற்றும் அதன் மூத்திரத்தால் மட்டுமே முடியும். எனவே ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நமது பண்ணையில் அவசியம் பங்குபெறும்.
- பாம்பும், பல்லியும், வண்டும், நண்டும் உழவனின் நண்பர்கள்.
- வண்ணத்துப்பூச்சியும், பொன் வண்டுகளும், தேனீக்களும் தாவரங்களின் காம தூதர்கள்.
- அயல் மகரந்த சேர்க்கையின் அவதார புருஷர்கள்.
- உணவுக்காகத்தான் தானியங்கள் உற்பத்தி வியாபாரத்திற்கு அல்ல.
- விவசாயம விவசாயிகள் கையில் இருக்க வேண்டும்.
உணவுச் சங்கிலி காக்க! உயிர்ச் சங்கிலி காப்போம் !!
செயல் திட்டங்கள்
- ஆடும் மாடும் அன்றாட வரவு
- தேனும் பாலும் தினசரி வரவு
- வாழையும் கரும்பும் வருட வரவு
- தென்னையும் பனையும் நிரந்தர வரவு
- மலை வேம்பும் வேங்கையும் நிரந்தர முதலீடு
- குமிழும் சந்தனமும் கூடுதல் வரவு
- நெல் கம்பு சோளம் தட்டை மொச்சை உளுந்து
- அவரை துவரை கத்தரி தக்காளி மிளகாய் – ஊடுபயிர்கள் என
- சுத்தமான இயற்கை உணவு உற்பத்தி
- நகரம் தோறும் நேரடி விற்பனை மையங்கள்
- மதிபூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி
- இயற்கை விவசாய ஆராய்ச்சி கூடம்
- இயற்கை மருத்துவம் இயற்கை உணவு விடுதி
- இயற்கை விவசாய வகுப்புகள் பயிற்சி பட்டறைகள்
- இயற்கை சூழலில் தங்கும் விடுதி மேலும் பற்பல….
- இயற்கையோடு இணைந்த வாழ்வு
எங்களின் லட்சியம்
மாவட்டம் தோறும் சமத்துவ இயற்கை வேளாண் கூட்டுப்பண்ணை.
கிராமம் தோறும் தரிசு நில மேம்பாட்டு கூட்டுப்பண்ணை..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி உழுதால் குறைவின்றி செல்வம்...
நுழைவாயில்
- மேற்கு தொடர்ச்சி மலைமகளின் மடியில் – பழனிக்கு அருகில்
(25கி.மீ) குதிரை ஆறு அணையின் இடதுகரையில் ஆண்டிபட்டி
கிராமத்தில்500 ஏக்கரில் மகாராஜா பண்ணை அமைந்துள்ளது.
- இது ஒரு சமத்துவ இயற்கை விவசாயக் கூட்டுப்பண்ணை.
- அதிநவீன உயர் தொரீல் நுட்பம்.
- பண்ணையில் வரப்புகள் இல்லை.
- சாதி-மதம், உயர்ந்தோர் – தாழ்ந்தோர் பேதமில்லை..
- ஆதி திராவிடர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் முன்னுரிமை.
- கூட்டுப்பண்ணையின் முன்னோடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- விவசாத்தை உயர வைக்கும் சிறப்பு வேளாண்மையம் SAZ (Special Agriculture Zone).
- வாழ்க்கையின் வடிகாலில் உழைத்து களைத்தபோது உட்கார்ந்து இளைப்பாற சொந்த நிலம்.





