நோக்கங்கள்
1. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கான ஒரு இயக்கம்.
2. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களின் விளைபொருட்களுக்கு தாங்களே விற்பனை விலையை நிர்ணயிக்கும் நிலையை கொண்டு வருதல்.
3. உணவு உற்பத்தியில் நமது நாட்டு சுயதேவையைப் பூர்த்தி செய்தல்.
4. சாதாரண விவசாயிகளும் 'கூட்டமைப்பு' மூலம் தங்களின் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்துதல்.
5. SEZ (Special Economical Zone)ஐ மட்டும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசுகளை SAZ (Special Agricultural Zone) துவக்கச் செய்தல்.
6. இயற்கை வேளாண் உற்பத்தியை சாதாரண விவசாயிகளும் கற்றுக் கொள்ள செய்தல்.
7. இயற்கை விவசாய வகுப்புகள், பயிற்சி பட்டறைகள், மதிப்பூட்டும் நேரடி பயிற்சிகள்.
8. சித்தா - மூலிகைகள் உற்பத்தி - மதிப்பூட்டப்பட்டு சந்தைப் படுத்துதல்.
9. மாவட்டம் தோறும் மாதிரி சமத்துவ இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை.
10. கிராமங்கள் தோறும் தரிசு நில மேம்பாட்டு கூட்டுப் பண்ணை.
11. கிராமம் தோறும் 100 ஏக்கரில் ஆண்டுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கு வேளாண் உற்பத்தியை உருவாக்குதல். ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 கிராமங்களில் உற்பத்தி செய்தால் 500 கோடிக்கு உற்பத்தி செய்ய முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக 25 மாவட்டங்களில் 12,500 கோடி உற்பத்தியை எட்ட முடியும். நமது இந்தியாவில் குறைந்தது 20 மாநிலங்களில் கூட்டுப் பண்ணை திட்டத்தை செயல்படுத்தினால் ரூ. 2.5 இலட்சம் கோடிக்கு தரிசு நிலங்களில் வேளாண் உற்பத்தியை அதிகமாக்க முடியும்.
12. 100 ஏக்கர் நிலத்துக்கு 50 பேருக்கு வேலை வாய்ப்பு - மாவட்டத்தில் 1000 கிராமங்களில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு - மாநிலத்திற்கு 12.5 இலட்சம் பேர் - இந்தியா முழுக்க 2.5 கோடி நபர்களுக்கு படித்த, படிக்காத நபர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பு.








