திரு. கு. புகழேந்தி

10.12.1954ல் விழுப்புரம் மாவட்டம், திருகோயிலூர் வட்டம், மே மாளூர் கிராமத்தில் அமரர் திரு. குமாரசாமி, திருவாட்டி சகுந்தலை இணையர்களான எளிய விவசாயிகளின் குழந்தையாகப் பிறந்தவர் புகழேந்தி. புகழேந்தி உயர்நிலைப் பள்ளிக்கல்வியான 11-ஆம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வி பயின்றவர். திருமதி ரோஜாவதியைத் தமது வாழ்க்கைத் துணைநலமாகக் கொண்டவர். பாரதி, பவித்திரா, பவ்யா என்னும் மும்மணிகளை மக்கட் செல்வமாகப் பெற்றவர்.
1977 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மைசூர்த் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இவர் 1979ல் மைசூர்த் தமிழ்ச் சங்கத்தில் தம்மை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 1982-83 பருவத்தில் மைசூர் தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினரானார். தமது செயல்திறத்தால் 1988/87 பருவத்தில் மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளரானவர். தமது உழைப்பாற்றலால் இன்றுவரை தொடர்ந்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நீடித்து தமது நெடும் பணியை தொடர்ந்து ஆற்றிவருகிறார். நமது பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினர். குண்டல்பேட்டைத் தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினராகித் தொண்டாற்றுகிறார்.
கர்நாடகத்தின் ஜெயவர்த்தனே பங்காரப்பாவினால் தூண்டி விடப்பட்ட 1991 இனக்கலவரத்தில் மைசூர் மாவட்டத்தில் மைசூர், சாம்ராஜநகர், குடகு மாவட்டத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது மண்டியா, மைசூர், கொள்ளேகால், மைசூர், சாம்ராஜநகர்ப் பகுதிகளில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்ய வைத்தவர். பாதிக்கப்பட்டவர்களை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக் குழுவின் முன்னர் நிறுத்தி, இழப்பீட்டுத் தொகைக்கானவர்களின் பரிந்துரைப் பட்டியலைப் பெற்றார். 1999ல் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரிக்கலவர நிவாரணக்குழுவின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் நான்கைந்து மாதங்கள் இடையறாது அலைந்து 5000 வழக்குகளைப் பதிவு செய்தார். இதனால் நலிந்த தமிழர்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பவர் ஆனார். மேலும் கொள்ளேகாலம், சாம்ராஜ்நகர், மைசூர்த் தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பைத் தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியமாய் உருவாக்கினார். அவ்வொன்றியத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை 1992ல் ஏற்றுக் கொண்டவர், இன்றுவரை அந்தப்பொறுப்பை இடையறாது சுமந்து கொண்டுள்ளார். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
1992ல் மைசூர் மாவட்டத்தில் ஒன்பது ஊர்களில் தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்தும், பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்டத்தின் துணையோடு தக்கவர்களைக் கொண்டு தீர்க்கவும் செய்தார். 2.10.1983ல் ‘மைசூர் முரசு’ என்கிற திங்களிதழைச் தொடங்கி அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கொண்டு இன்றுவரை சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். 2.3.1985ல் மைசூர் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் அணியைத் தொடங்கி அவர்கள் வழியாக ஏழை எளியவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று தொண்டாற்றச் செய்துள்ளார். 5.4.1987ல் 4000 நூல்களடங்கிய தமிழ்நூலகம் ஒன்றைத் தொடங்கி மேலும் மேலும் மேம்படுத்தி இன்றுவரை அந்நூலகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
இவர், தமது மூத்தமகள் பாரதியின் திருமணத்தன்றும், திருமண வரவேற்பன்றும் மணமக்களை வாழ்த்த வந்த ஆயிரக்கணக்காணவர்களுக்கு தாம்பூலமாக, ‘தேங்காய்-பழம்-பூ’ என்று வழங்குவதைத் தவிர்த்து ‘மரம் வாழ மனிதம் வாழும்’ என்று தாம்பூலப் பைகளில் அச்சிட்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி, அக்கன்றுகளை எப்படி நடுவது வளர்ப்பது என்று குறிப்புகளும் கொடுத்து உதவினார். திருமண வரவேற்பில் பதினாறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களை வரவழைத்து அறிவுரையும், அறவுரையும் வழங்கச் செய்து தமிழ் மணத்தையும் பரவச் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தில் 5000 வழக்குகளுக்கு மேல் தொடுக்கப்பட்டாலும் 9 ஆண்டுகளில் சுமார் எண்ணுறு வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு ரூ 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் ஏற்படும் அளவற்ற காலத்தாழ்ச்சியால் பாதிகப்பட்டவர்கள் தங்கள் உரிமையைப் பெறாமல் போவதும், உரிமைகள் வழங்கப்படும்போது அதன் பயனைப் பெற முடியாமல் உரிமைக்கு உரியவர்கள் உயிரோடு இல்லாமல் போவதும் இந்நாட்டில் நிலவிவரும் அவலம். அதுமட்டுமின்றி விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே உள்ள சிலர் மனசாட்சி இல்லாமல் நடுநிலையில்லாக் கூட்டமாக இருந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியையே மிதிப்பதும் இந்நாட்டில் நிலவும் அவலமாக உள்ளது. இந்நிலையில் காவிரிக்கலவரத்தால் பாகிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ரூபாய் இரண்டுகோடி நான்கு லட்சம் மிகக் குறைவானது என்று மீண்டும் இரண்டு முறை அதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை இரண்டு முறை பதிவு செய்யப் போராடித் தோற்றார். எனினும் தோல்வியால் துவளாமல் உச்சநீதி மன்றத்தின் குறைந்த இழப்பீட்டையும் இன்னும் முந்நூறு பேருக்குமேல் வழங்காமல் இருக்கும் கர்நாடக அரசின் அதிகாரவர்கத்தை அணுகி, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவருடன் கர்நாடக அரசின் உள்துறை அமைச்சர், முதல்வர், முதன்மைச் செயலர் மற்றும் மூத்த தலைவர் திரு.தேவகவுடா ஆகியோரை அணுகி விரைவில் இழப்பீடு பெற்றுத்தரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மைசூரில் நலிந்த நிலையிலிருந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகள் ஒரு கன்னடப்பள்ளி ஆகியவற்றைத் தத்தெடுத்து மைசூர்த் தமிழ்ச்சங்கத்தின் வழியாக நடத்தி வருகிறார். தனியார் இடத்திலிருந்த தமிழ்ப்பள்ளியை மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ரூ இரண்டரை இலட்சம் செலவில் புதுப்பித்து மாணவ மாணவிகளுக்குக் கழிப்பறைகள் மற்றும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு முதலியவற்றைச் செய்து கொடுத்துள்ளார்.
1991-காவிரி நீர்பங்கீடு என்ற பெயரால் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட உழவர்களை நெருப்பில் விழுந்து கருகிய நிலையிலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டும் உயிர்ப்பித்து ஒன்று திரட்டிக் கூட்டுப் பண்ணை ஒன்றை நூறு ஏக்கருக்கு மேலாக உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்ட எடுத்துக் காட்டான பண்ணை என்று கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தாலும் நடுவண் அரசாலும் பாராட்டப்பட்டது. மைசூரில் வாழ்கிற அனைத்து மொழியினரையும் கன்னட சகோதரர்களையும் இணைத்து வசந்தோத்சவா என்கிற வசந்த விழாவை நடத்தி ஒற்றுமை உணர்வுக்கு உரமளித்தவர், தமிழர்கள் யாருக்கும் விரோதிகள் அல்லர், அதே சமத்தில் யாருக்கும் அடிமைகளல்லர் என்பதை மெய்ப்பிக்கும் உறுதியாளர்.
ஒரு நூலகராய், தமிழர்களின் பாதுகாவலராய், ஒற்றுமைக்கு இலக்கணமானவராய், இயற்கைச் சூழலைக் காக்கும் புதிய சிந்தனையாளராய், ஒற்றுமைக்கு இலக்கணமானவராய், இயற்கைச் சூழலைக் காக்கும் புதிய சிந்தனையாளராய் விளங்கும் புகழேந்தி அவர்கள் நோக்கம் கர்நாடகத் தமிழர்கள் மாத்திரம் ஒன்றுபட்டால் போதாது, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே!
ப. சண்முகசுந்தரம்.
திரு. கு. புகழேந்தி
பொதுச்செயலாளர், மைசூர்த்தமிழ்ச்சங்கம்.
10.12.1954ல் விழுப்புரம் மாவட்டம், திருகோயிலூர் வட்டம், மே மாளூர் கிராமத்தில் அமரர் திரு. குமாரசாமி, திருவாட்டி சகுந்தலை இணையர்களான எளிய விவசாயிகளின் குழந்தையாகப் பிறந்தவர் புகழேந்தி.
புகழேந்தி உயர்நிலைப் பள்ளிக்கல்வியான 11-ஆம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வி பயின்றவர். திருமதி ரோஜாவதியைத் தமது வாழ்க்கைத் துணைநலமாகக் கொண்டவர். பாரதி, பவித்திரா, பவ்யா என்னும் மும்மணிகளை மக்கட் செல்வமாகப் பெற்றவர்.
1977 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மைசூர்த் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இவர் 1979ல் மைசூர்த் தமிழ்ச் சங்கத்தில் தம்மை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 1982-83 பருவத்தில் மைசூர் தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினரானார். தமது செயல்திறத்தால் 1988/87 பருவத்தில் மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளரானவர். தமது உழைப்பாற்றலால் இன்றுவரை தொடர்ந்து அச் சங்கத்தின் பொதுச்செயலாளராகவே நீடித்து தமது நெடும் பணியை தொடர்ந்து ஆற்றிவருகிறார். நமது பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினர். குண்டல்பேட்டைத் தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினராகித் தொண்டாற்றுகிறார். கர்நாடகத்தின் ஜெயவர்த்தனே பங்காரப்பாவினால் தூண்டி விடப்பட்ட 1991 இனக்கலவரத்தில் மைசூர் மாவட்டத்தில் மைசூர், சாம்ராஜநகர், குடகு மாவட்டத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது மண்டியா, மைசூர், கொள்ளேகால், மைசூர், சாம்ராஜநகர்ப் பகுதிகளில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்ய வைத்தவர்.. பாதிக்கப்படவர்களை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக் குழுவின் முன்னர் நிறுத்தி, இழப்பீட்டுத் தொகைக்கானவர்களின் பரிந்துரைப் பட்டியலைப் பெற்றார். 1999ல் உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி காவிரிக்கலவர நிவாரணக்குழுவின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் நான்கைந்து மாதங்கள் இடையறாது அலைந்து 5000 வழக்குகளைப் பதிவு செய்தார். இதனால் நலிந்த தமிழர்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பவர் ஆனார். மேலும் கொள்ளேகாலம், சாம்ராஜ்நகர், மைசூர்த் தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பைத் தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியமாய் உருவாக்கினார். அவ்வொன்றியத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை 1992ல் ஏற்றுக் கொண்டவர், இன்றுவரை அந்தப்பொறுப்பை இடையறாது சுமந்து கொண்டுள்ளார். பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
1992ல் மைசூர் மாவட்டத்தில் ஒன்பது ஊர்களில் தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்தும், பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்டத்தின் துணையோடு தக்கவர்களைக் கொண்டு தீர்க்கவும் செய்தார்.
2.10.1983ல் ‘மைசூர் முரசு’ என்கிற திங்களிதழைச் தொடங்கி அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கொண்டு இன்றுவரை சிற்ப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்.
2.3.1985ல் மைசூர் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் ஆணியைத் தொடங்கி அவர்கள் வழியாக ஏழை எளியவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று தொண்டாற்றச் செய்துள்ளார்.
5.4.1987ல் 4000 நூல்களடங்கிய தமிழ்நூலகம் ஒன்றைத் தொடங்கி மேலும் மேலும் மேம்படுத்தி இன்றுவரை அந்நூலகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
இவர், தமது மூத்தமகள் பாரதியின் திருமணத்தன்றும், திருமண வரவேற்பன்றும் மணமக்களை வாழ்த்த வந்த ஆயிரக்கணக்காணவர்களுக்கு தாம்பூலமாக, ‘தேங்காய்-பழம்-பூ’ என்று வழங்குவதைத் தவிர்த்து ‘மரம் வாழ மனிதம் வாழும்’ என்று தாம்பூலப் பைகளில் அச்சிட்டு மூவாயிரத்திற்க்கு மேற்பட்ட மரக் கன்றுகளை வழங்கி, அக்கன்றுகளை எப்படி நடுவது வளர்ப்பது என்று குறிப்புகளும் கொடுத்து உதவினார். திருமணவரவேற்பில் பதினாறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களை வரவழைத்து அறிவுரையும், அறவுரையும் வழங்கச் செய்து தமிழ் மணத்தையும் பரவச் செய்தார்.
உச்ச நீதிமற்த்தில் 5000 வழக்குகளுக்கு மேல் தொடுக்கப்பட்டாலும் 9 ஆண்டுகளில் சுமார் எண்ணுறு வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு ரூ 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய்மட்டுமே இழுப்பீடாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் ஏற்படும் அளவற்ற காலத்தாழ்ச்சியால் பாதிகப்பட்டவர்கள் தங்கள் உரிமையைப் பெறாமல் போவதும், உரிமைகள் வழங்கப்படும்போது அதன் பயனைப் பெற முடியாமல் உரிமைக்கு உரியவர்கள் உயிரோடு இல்லாமல் போவதும் இந்நாட்டில் நிலவிவரும் அவலம். அதுமட்டுமின்றி விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே உள்ள சிலர் மனசாட்சி இல்லாமல் நடுநிலையில்லாக் கூட்டமாக இருந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களால் தேந்த்தெடுக்கப்பட்ட மக்களாட்சியையே மிதிப்பதும் இந்நாட்டில் நிலவும் அவலமாக உள்ளது. இந்நிலையில் காவிரிக்கலவரத்தால் பாகிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ரூபாய் இரண்டுகோடி நான்கு லட்சம் மிக் குறைவானது என்று மீண்டும் இரண்டு முறை அதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை இரண்டு முறை பதிவு செய்யப் போராடித் தோற்றார். எனினும் தோல்வியால் துவளாமல் உச்சநீதி மன்றத்தின் குறைந்த இழப்பீட்டையும் இன்னும் முந்நூறு பேருக்குமேல் வழங்காமல் இருக்கும் கர்நாடக அரசின் அதிகாரவர்கத்தை அணுகி, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவருடன் கருநாடக அரசின் உள்துறை அமைச்சர், முதல்வர், முதன்மைச் செயலர் மற்றும் மூத்த தலைவர் திரு.தேவே கவுடா ஆகியோரை அணுகி விரைவில் இழப்பீடு பெற்றுத்தரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மைசூரில் நலிந்த நிலையிலிருந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகள் ஒரு கன்னடப்பள்ளி ஆகியவற்றைத் தத்தெடுத்து மைசூர்த் தமிழ்ச்சங்கத்தின் வழியாக நடத்தி வருகிறார். தனியார் இடத்திலிருந்த தமிழ்ப்பள்ளியை மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் மூலம் ரூ இரண்டரை இலட்சம் செலவில் புதுப்பித்து மாணவ மாணவிகளுக்குக் கழிப்பறைகள் மற்றும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு முதலியவற்றைச் செய்து கொடுத்துள்ளார்.
1991-காவிரி நீர்பங்கீடு என்ற பெயரால் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட உழவர்களை நெருப்பில் விழுந்து கருகிய நிலையிலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் உயிர்ப்பித்து ஒன்று திரட்டிக் கூட்டுப் பண்ணை ஒன்றை நூறு ஏக்கருக்கு மேலாக உருவாக்கினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்ட எடுத்துக் காட்டான பண்ணை என்று கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தாலும் நடுவண் அரசாலும் பாராட்டப்பட்டது.
மைசூரில் வாழ்கிற அமைத்து மொழியினரையும் கன்னட சகோதரர்களையும் இணைத்து வசந்தோத்சவா என்கிற வசந்த விழாவை நடத்தி ஒற்றுமை உணர்வுக்கு உரமளித்தவர், தமிழர்கள் யாருக்கும் விரோதிகள் அல்லர், அதே சமத்தில் யாருக்கும் அடிமைகளல்லர் என்பதை மெய்ப்பிக்கும் உறுதியாளர்.
ஒரு நூலகராய், தமிழர்களின் பாதுகாவலராய், ஒற்றுமைக்கு இலக்கணமானவராய், இயற்கைச் சூழலைக் காக்கும் புதிய சிந்தனையாளராய், ஒற்றுமைக்கு இலக்கணமானவராய், இயற்கைச் சூழலைக் காக்கும் புதிய சிந்தனையாளராய் விளங்கும் புகழேந்தி அவர்கள் நோக்கம் கருநாடகத் தமிழர்கள் மாத்திரம் ஒன்றுபட்டால் போதாது, உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே!
ப. சண்முகசுந்தரம்.





